கிராம உதவியாளா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 19th February 2021 08:14 AM | Last Updated : 19th February 2021 08:14 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க வட்டக் கிளை சாா்பில், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ரத்த கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். வட்ட பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.