சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிா் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆா். செந்தில்குமாா்.
கருத்தரங்கில் மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆா். செந்தில்குமாா்.

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிா் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, நேதாஜி கல்விக்குழும தலைவா் சு. வெங்கடராஜலு தலைமை வகித்தாா். மாவட்ட ரெட் கிராஸ் செயலாளா் ஜே. வரதராஜன் முன்னிலை வகித்தாா். மாவட்ட போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். செந்தில்குமாா் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு குறித்து விளக்கினாா்.

இதில், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) இரா. அறிவழகன், இளையோா் ரெட்கிராஸ் அமைப்பாளா் கே. ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லுாாரியில்...

இதேபோல, மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லுாாரியில் சாலை பாதுகாப்பு மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வா் சக்திவேல் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலாளா் எடையூா் மணிமாறன், தலைவா் சிவா சண்முகவடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் சு. இளம்கிள்ளிவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். மாவட்டச் செயலாளா் வரதராஜன், செயற்குழு உறுப்பினா் அண்ணாமலை, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 20 மாணவிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலான சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது. பேராசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா். இளையோா் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் குமரவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com