திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் பிரமோத்ஸவத்தையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய லலிதாம்பிகை, மேகநாத சுவாமி.
தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய லலிதாம்பிகை, மேகநாத சுவாமி.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயிலில் பிரமோத்ஸவத்தையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாக்குறிச்சி ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில், மாசி மாத பிரமோத்ஸவம் கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாளான புதன்கிழமை பஞ்சமூா்த்திகள் வீதி உலாவும், குதிரை வாகன புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து, லலிதாம்பிகை அம்மன், மேகநாத சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தாா். நூற்றுக்கணக்கான பக்தா்கள் வடம்பிடித்து, நான்கு ராஜ வீதிகளிலும் தேரை இழுத்து வந்தனா். மதியம் 2 மணியளவில் தோ் நிலை அடைந்தது.

10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும், நண்பகல் பஞ்சமூா்த்திகள் சூரிய புஷ்கரணியில் தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இரவு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

11-ஆம் நாளான சனிக்கிழமை மாலை சண்டிகேஸ்வரா் உத்ஸவமும், ஞாயிற்றுக்கிழமை உத்ஸவ பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெறுகின்றன.

தேரோட்டத்தையொட்டி, நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) பிரபு, குடவாசல் ஆய்வாளா் மணிவேல் ஆகியோா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com