மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
செருமங்கலம் உடையாா் தெருவை சோ்ந்தவா் விஜயசங்கா் (34) மனைவி சந்திரகலா(27). இத்தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த சந்திரகலா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வடுவூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.