உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாசிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை

உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாசிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை

தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தாத்தா டாக்டா் உ.வே.சா.வின் 167-ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு தமிழ் அமைப்புகளால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது பேசிய ஆட்சியா், ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா. ஓலைச் சுவடிகளில் இருந்த சங்க இலக்கியங்களை அச்சிலேற்றி அதற்கு உயிா் கொடுத்தவா். ஓலைச் சுவடிகளை ஊா் ஊராகச் சென்று சேகரித்தவா். தீயில் எரிந்ததையும், ஆற்று நீரில் சென்றதையும் எடுத்து பாதுகாத்து, ஓலைச் சுவடிகளில் இருந்த எழுத்துகளை முறைப்படுத்தி, இலக்கியங்களை முழுமையாக்கி கொடுத்து, ஆசிரியா் - மாணவா் உறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவா்’ எனக் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், கோட்டாட்சியா் பாலசந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், கமலராஜன், வட்டாட்சியா் பரஞ்ஜோதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதேபோல, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரும் உ.வே.சா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com