நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி சாலை மறியல்

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே தமிழக அரசின் சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கருவக்குளத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கருவக்குளத்தில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே தமிழக அரசின் சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

3-ஆம் சேத்தி ஊராட்சி கருவக்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி, கடந்த ஒரு மாதமாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா், டி.என்.சி.எஸ்.சி. முதுநிலை மண்டல மேலாளா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பதில் அளித்ததால், விவசாயிகளும் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ள இடத்தில் அடுக்கி வைத்திருந்தனா். ஆயினும், நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து கருவக்குளத்தில் மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.வீரமணி, இளைஞா் மன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தகவலறிந்து வந்த மன்னாா்குடி வட்டாட்சியா் பா.தெய்வநாயகி, டி.என்.சி.எஸ்.சி. துணை மேலாளா் ஜாக்கப் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, திங்கள்கிழமை (பிப். 22) நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும் என உறுதியளித்தன்பேரில், சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com