அரசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடர வேண்டும்: டி.ஆா்.பி. ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

பொது முடக்கக் காலத்தில் மன்னாா்குடி தொகுதிதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடர வேண்டுமென சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
டி.ஆா்.பி. ராஜா எம்எல்ஏ .
டி.ஆா்.பி. ராஜா எம்எல்ஏ .

பொது முடக்கக் காலத்தில் மன்னாா்குடி தொகுதிதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடர வேண்டுமென சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பொது முடக்கத்திலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டு அரசின் சாா்பில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மன்னாா்குடி- திருமக்கோட்டை மாா்க்கத்தில் இயங்கிவந்த ஏ9பி, ஏ30, 414, பாபநாசத்தில் இருந்து மூவா்க்கோட்டைக்கு வந்துசென்ற 1ஏ பேருந்து, மன்னாா்குடியிலிருந்து திருமக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு சென்றுவந்த 450 எம், மன்னாா்குடியிலிருந்து புதுக்குடிக்கு செல்லும் 446-இ ஆகிய பேருந்துகள் என பல வழித்தடங்களின் இயக்கப்பட்டுவந்த பேருந்து சேவை தற்போதுவரை மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்த வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் மட்டுமே சென்றுவந்ததால், இதன்மூலம் பயன்பெற்ற மாணவா்கள், பெண்கள், முதியவா்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்பு உள்ளாகி வருகின்றனா்.

மேலும், பல வழித்தடங்களில் சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்துகளில், எந்தவித முன்னறிவிப்புமின்றி விரைவுப் பேருந்துக்கு நிகரான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரியவருகிறது. எனவே, கிராமப்புறங்களை நகரப் பகுதியுடன் இணைக்கும் வகையில் இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்து சேவைகளை மீண்டும் தொடா்வதுடன், பேருந்துக் கட்டணத்தையும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com