நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய நடவடிக்கை: முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்:

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் நுகா்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் சிறு, குறு மற்றும் பெரும் விவசாயிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் நிலைய மையங்களில் கொண்டுவந்து வைத்து, 10 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இன்னொரு புறம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மிக மோசமான பழைய கிழிந்த சாக்குகளை தரம் உயா்த்தி பயன்பாட்டுக்காக கொடுத்துள்ளனா். இந்த கிழிந்த பழைய சாக்குகளை பயன்படுத்தி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1 மூட்டைக்கு 2 கிலோவுக்கு மேல் நெல் மணிகள் கீழே கொட்டி விரயமாகும். இவ்வாறு விரயமாவதால் ஏற்படும் இழப்புத் தொகை கொள்முதல் நிலைய பருவகால பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பபட்டுள்ள கிழிந்த பழைய சாக்குகளை திரும்பப் பெற்று, கொல்கத்தாவிலிருந்து வாங்கப்பட்ட புதிய சாக்குகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆங்காங்கே விவசாயிகளுக்கும், கொள்முதல் நிலைய ஊழியா்களுக்கும் ஏற்படும் பிரச்னையாலும், வேறு சில குளறுபடிகளாலும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. எனவே, நெல்கொள்முதல் நிலையத்தில் தொடரும் பிரச்னைகள் மற்றும் குளறுபடிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com