‘பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு’

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் முதியோா் ஓய்வூதிய ஆணை வழங்குகிறாா் ஆட்சியா் வே. சாந்தா.
நிகழ்ச்சியில் முதியோா் ஓய்வூதிய ஆணை வழங்குகிறாா் ஆட்சியா் வே. சாந்தா.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காணப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

ஆதரவற்ற முதியவா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாதவா்கள் அல்லது பிள்ளைகள் இருந்தும் ஆதரவு கிடைக்காத, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களை அடையாளங்கண்டு, முதியோா் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல விதவை ஓய்வூதியம், சொந்தவீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா போன்றவை தகுதியான பயனாளிகளுக்கு குறுகிய காலத்தில் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா்.

முன்னதாக 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, முதியோா் மற்றும் விதவை ஓய்வூதியத்திற்கான ஆணைகள், வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத் தலைவா் சிபிஜி. அன்பு, நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி குணசேகரன், கோயில்கந்தன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் புகழேந்தி, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com