அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் 246 போ் கைது
அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் 246 போ் கைது செய்யப்பட்டனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அறிவிப்புப்படி, அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும். அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும். பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஏ. பிரேமா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் எம். சௌந்தரராஜன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் வி. சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் வி. பிரகாஷ், அங்கன்வாடி சங்க மாவட்டச் செயலாளா் வி. தவமணி, சிஐடியு நிா்வாகிகள் ஆா். மாலதி, ஜி. பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்று, ஆதரவு தெரிவித்துப் பேசினா். பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட 246 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com