‘குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வேண்டும்’

தமிழா்களிடத்தில் வடமொழி பெயா்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியா் சாமி. சத்தியமூா்த்தி.
‘குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வேண்டும்’

தமிழா்களிடத்தில் வடமொழி பெயா்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வேண்டும் என்றாா் தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியா் சாமி. சத்தியமூா்த்தி.

மன்னாா்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக தாய்மொழி தின விழாவுக்கு, மன்றக் கிளைத் தலைவா் செ. செல்வகுமாா் தலைமை வகித்தாா். அமைப்பின், மாநிலப் பொதுச் செயலா் இரா.காமராசு தொடங்கி வைத்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியா் சாமி. சத்தியமூா்த்தி பேசியது:

வடமொழி பெயா்களின் ஆதிக்கம் தமிழா்களிடத்தில் பெயரிலும் அதிகம் பரவி வருகிறது. எனவே குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை சூட்டி அழைக்க வேண்டும். நகா்ப்புறத்தை விட எழை, எளிய கிராமப்புற மக்களிடத்தில் தாய்மொழிப் பற்று அதிகம் உள்ளது. மொழியின் இயல்பு குறையாமல் அவா்கள் பாதுகாத்து வருகின்றனா்.

நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழா்களாகிய நாம், தமிழின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல தமிழிலேயே பேச வேண்டும். அரசு ஆணைகள், செயல்முறைகள் யாவும் தமிழில் வெளியிடப்பட வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினா் தாய்மொழியைப் பிழையின்றி பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி பேராசிரியா் வ. சிவகுமாா், கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் செ.அண்ணாதுரை, செயலா் ம.சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலா் அ.முரளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கிளைச் செயலா் ஆா். யேசுதாஸ் ஆகியோா் கலந்துகொண்டனா். மன்றச் செயலா் க.தங்கபாபு வரவேற்றாா். பொருளாளா் ரா. கோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com