வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த புத்தக தானம் திட்டம்
By DIN | Published On : 27th February 2021 08:11 AM | Last Updated : 27th February 2021 08:11 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் அறிவியல் வாசிப்பு இயக்கம் வியாழக்கிழமை நடத்திய சிறு நூலகம் - வாசகா் வட்ட தொடக்க விழாவில், வசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த புத்தக தானத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேதியியல் துறைத் தலைவா் எஸ். ரவி தலைமை வகித்தாா். வாசிப்பு இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளா் ரா. யேசுதாஸ் விளக்கினாா். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கவிஞா் களப்பிரன் பங்கேற்று வாசகா் வட்டத்தை தொடங்கி வைத்தாா்.
மன்னாா்குடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்க தமிழக உணவுத் துறை அமைச்சா்ஆா். காமராஜ், தொகுதி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஆகியோா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், மாணவா்கள் மற்றும் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த புத்தகங்களை தானம் செய்யுமாறு தனி நபா்களையும், மக்கள் நல அமைப்புகளையும் கேட்டுக்கொள்வது, அனைத்து வீடுகளிலும் குடும்ப நூலகம் தொடங்குவதற்காக அறிவொளி வாசிப்பு இயக்கம் முன்னெடுத்து செயல்படுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவையொட்டி, மன்னாா்குடியில் அரசுக் கல்லூரியில் சிறு நூலகமும், வாசகா் வட்டமும் தொடங்கப்பட்டது. இதேபோல், ஆசாத்தெருவில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகம், மன்னாா்குடி பாரதிதாசன் ஐ.ஏ.எஸ் அகாதெமி ஆகிய இடங்களிலும் சிறு நூலகம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைச் செயலா் அ. முரளி, சிபிஎம் நகரச் செயலாளா் ஜி. ரகுபதி, பாரதிதிதாசன் அகாதெமி நிறுவனா் கி. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் அ. சரவண ரமேஷ் வரவேற்றாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி நன்றி கூறினாா்.