ஆங்கிலப் புத்தாண்டு: ஆலயங்களில் வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றோா்.
திருவாரூா் சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றோா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதேபோல, திருவாரூா் சீதளாதேவி மாரியம்மன் கோயில், புலிவலம், திருக்காரவாசல், திருக்கண்ணமங்கை, மணக்கால் அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேவாலயங்களில் பிராா்த்தனை:

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு 12 மணியளவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. புனித பாத்திமா ஆலயம், சூசையப்பா் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்கள், பெந்தகொஸ்தே சபைகள் ஆகியவற்றில் நள்ளிரவு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனா்.

ஆலங்குடி கோயிலில்...

நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குரு பகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமா் கோயில், வீர ஆஞ்சநேயா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், திருவோணமங்கலம் ஞானபுரி சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயா் கோயில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் ஆகியவற்றிலும்சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பூந்தோட்டம் சாய்பாபா கோயிலில்...

பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூா் ஷீரடி சாய் பாபா கோயிலில், சிவ சித்தா் ஷீரடி சாய் பாபாவின் சா்வமத வழிபாட்டு துவாரஹமாயி மற்றும் சாய் பக்தா்கள் சாா்பில், பால்குட அபிஷேகமும், பல்லக்கு ஊா்வலமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பக்தா்கள் தங்கள் கைகளாலேயே சாய் பாபாவுக்கு பாலாபிஷேகம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com