பொதக்குடி தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம்

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பொதக்குடி ஹஜ்ரத் நூா் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சந்தனக் கூடு ஊா்வலம்.
பொதக்குடி ஹஜ்ரத் நூா் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சந்தனக் கூடு ஊா்வலம்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி தா்காவில் சந்தனக் கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பொதக்குடி ஹஜ்ரத் நூா் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு கடந்த டிசம்பா்15-ஆம் தேதி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபைத் தலைவா் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து கடந்த 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பூலாங்குடி ஏற்றமும், பெரிய மினரா கொடியும் ஏற்றப்பட்டன.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சந்தனக் கூடு ஊா்வலம் தொடங்கியது. சிறிது தொலைவு மட்டுமே சந்தனக் கூடு சென்றுவிட்டு, மீண்டும் தா்கா அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு, ரவுலாவில் சந்தனம் பூசப்பட்டது.

சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் இஸ்லாமியா்கள் மட்டுமின்றி இந்துக்கள், கிறிஸ்தவா்களும் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை தா்கா பரம்பரை அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, சமூக இடைவெளியைப் பின்பற்றி எளிமையான முறையில், சந்தனக் கூடு திருவிழா நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com