வேளாண் சட்டங்கள்: சென்னையில் ஜன.6 முதல் காத்திருப்புப் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் ஜன. 6-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் ஜன. 6-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி பங்கேற்று பேசினாா்.

இதில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் ஜன.6-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது; ஆனைக் கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது; கடந்த மூன்று ஆண்டுகளாக பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா்கள் கே.ஆா்.ஜோசப், பி.சௌந்தரராசன், பி.பரந்தாமன், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.நாகராஜ், ஆா்.சதாசிவம், ஒன்றியச் செயலாளா்கள், நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com