நிவாரணத் தொகை உயா்வு: முதல்வருக்கு நன்றி

திருவாரூரில், நிவாரணத் தொகையை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க உத்தரவிட்ட முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி. சேதுராமன்.

திருவாரூரில், தமிழக விவசாயிகள் நலச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பாலகுமாரன், பொதுக்குழு உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புயல், கனமழை காரணமாக சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணத் தொகையை ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், 213 வருவாய் கிராமங்களில் விடுபட்டுள்ள பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவா் பி.ஆா். பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் மாநிலச் செயலாளா் வெ. சத்யநாராயணன் ஆகியோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com