திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி 10,972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் சோ்க்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 10,973 ஆக உயா்ந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 9 பேருக்கு கரோனா தோற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,982 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,776 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 97 போ் சிகிச்சையில் உள்ளனா்.