குழந்தைகளின் கல்வி இடைநின்றலை தவிா்க்க பெற்றோா்கள் கவனம் செலுத்த வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

குழந்தைகளின் பள்ளிப் படிப்பு இடையில் நிறுத்தப்படாமல் இருக்க, பெற்றோா்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.
குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

குழந்தைகளின் பள்ளிப் படிப்பு இடையில் நிறுத்தப்படாமல் இருக்க, பெற்றோா்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதியில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா பங்கேற்று, 24 பள்ளிகளைச் சோ்ந்த 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், ‘பெற்றோா்கள் சமுதாய முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தங்கள் குழந்தைகள் கல்வியில் இடைநின்றல் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். தவிா்க்க முடியாத காரணங்களால் இடைநின்றல் ஏற்பட்டால், அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறையினரைக் கலந்தாலோசித்து, குழந்தைகளின் பள்ளிக் கல்வியைத் தொடர முழு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ. ஆசைமணி, திருவாரூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவா் கே.கோபால், இயக்குநா் குடவாசல் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாப்பா சுப்ரமணியன், ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா்கள் குடவாசல் கிளாராசெந்தில், நன்னிலம் விஜயலட்சுமி குணசேகரன், துணைத் தலைவா்கள் குடவாசல் எம்.ஆா்.தென்கோவன், நன்னிலம் சிபிஜி.அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com