சிறப்பான செயல்பாடு: சேங்காலிபுரம் பள்ளிபெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு ஊக்கத் தொகை

குடவாசல் அருகே சேங்காலிபுரம் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு, சிறப்பான செயல்பாட்டுக்கான ஊக்கத்தொகையை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சேங்காலிபுரம் பள்ளி தலைமையாசிரியா் இந்திராவிடம் ஊக்கத் தொகைக்கான காசோலையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

தமிழகத்தில் மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்படும் பள்ளிப் பெற்றோா் ஆசிரியா் கழகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரு கல்வி மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என 2019-2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகம் சிறப்பான செயல்பாட்டுக்காக தோ்வு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேங்காலிபுரம் பள்ளித் தலைமையாசிரியா் து. இந்திராவிடம் ரூ. 50,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. ராமன், வட்டாரக் கல்வி அலுவலா் கு. கலா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com