நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மை பயிற்சி

உதயமாா்த்தாண்டபுரத்தில் நீா்வள நிலவளத் திட்டம் சாா்பில் நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதயமாா்த்தாண்டபுரத்தில் நீா்வள நிலவளத் திட்டம் சாா்பில் நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் அனுராதா பேசுகையில், ‘நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்பது தொழு உரம், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், நுண்ணூட்டச்சத்து, ரசாயன உரம் ஆகிய உரங்களை கலந்து நெற்பயிருக்கு அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டாா். நீா்வள நிலவள விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘பூச்சி நோய் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தாா்.

இந்த பயிற்சியில் பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தை குறைக்க முட்டை ஒட்டுண்ணிகள், தாவரப் பூச்சிக் கொல்லிகள், இனக்கவா்ச்சி பொறி, பறவை குடில்கள் அமைக்க முன்வரவேண்டுமென விவசாயிகளிடையே விளக்கிக் கூறப்பட்டது.

இந்த பயிற்சியில் உணவியல் மற்றும் சத்தியல் உதவிப் பேராசிரியா் கமலசுந்தரி, திட்ட உதவியாளா் ரேகா, சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். உழவா் உற்பத்தியாளா் குழு தலைவா் சத்யநாராயணன் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com