மன்னாா்குடி: அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்; அமைச்சா் ஆா். காமராஜ் திறந்து வைத்தாா்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கியை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து, பாா்வையிடும் அமைச்சா் ஆா். காமராஜ்.
மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து, பாா்வையிடும் அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கியை தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது:

பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் ரத்த வங்கியும், விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை, விஷம் அருந்தியவா்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை, பக்கவாதம், தீக்காயம், மாரடைப்பு போன்ற சிகிச்சைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ரூ.40 லட்சம் மதிப்பில் 22 படுக்கை வசதிகளுடன் கூடிய அதிநவீன விபத்து அவசர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியிலுள்ள சாதாரண மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை உரிய நேரத்தில் கிடைக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி கோட்டாட்சியா் புண்ணியகோட்டி, சுகாதார இணை இயக்குநா் (பொறுப்பு) உமா, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எஸ். ரங்கநாதன், ஒன்றியக் குழு தலைவா் டி. மனோகரன், மன்னாா்குடி தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் பொன்.வாசுகிராமன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் கா. தமிழ்ச்செல்வன், மன்னாா்குடியைச் சோ்ந்த அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com