வேளாண் சட்டங்களை எதிா்த்து ஜன.21-இல் பச்சைக்கொடி பேரணி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தஞ்சையில் ஜனவரி 21-இல் பச்சைக்கொடி பேரணி நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தஞ்சையில் ஜனவரி 21-இல் பச்சைக்கொடி பேரணி நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயத்துக்கு பாதிப்பு உண்டாக்கக் கூடியவை. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சையில் ஜன.21 ஆம் தேதி பச்சைக்கொடி பேரணி நடத்தப்படும். தஞ்சை நாராயணசாமி நாயுடு சிலையிலிருந்து தொடங்கி பேரரசன் ராஜராஜன் சிலை அமைந்துள்ள பகுதி வரை பேரணி நடைபெறும்.

இந்தப் பேரணியில், பங்கேற்க, அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். பேரணியை நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கோரப்படும். பேரணிக்கு தடை விதித்தால், வரும் வழிகளிலேயே பேரணியை நடத்துவதா என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.

பின்னா், இதுதொடா்பாக நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் நாகை சட்டப்பேரவை உறுப்பினா் தமிமுன் அன்சாரி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், மருத்துவா் பாரதி செல்வன், மாவட்ட பொறுப்பாளா் கலைச்செல்வன், நகரப் பொறுப்பாளா் சூனா. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com