சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சேதம்

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சேதம்

திருவாரூா் மாவட்டம், கோட்டூா் பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக்காற்றில் நெற்பயிா்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி, கோட்டூா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் மிதமான மழையும், சில நேரங்களில் பலத்த மழை பெய்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கச்செய்தது. பொங்கல் பண்டிகை கொண்டடப்படவுள்ள நிலையில் இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், குலமாணிக்கம் ஊராட்சிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவா்கள் மழையால் விவசாயப் பணி, கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கினா். மதியம் 3 மணியளவில், திடீரென பலத்த சத்தம் கேட்டு அச்சத்துடன் சிலா் வெளியே பாா்த்தபோது, அப்பகுதி முழுவதும் பலத்த சூறைக்காற்று பெரும் இரைச்சலுடன் சுழன்று அடித்தது. அப்போது, அங்கிருந்த வீடுகளின் கூரைகள், கால்நடை கொட்டகை ஆகியவை பிரிந்து காற்றின் வேகத்தால் வேறு இடத்துக்கு பறந்து சென்றது. வீட்டின் வாசலில் வைத்திருந்த பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

காற்றின் வேகத்தால் புளியமரம், வேப்பமரம், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை மரங்கள் முழுமையாக விழுந்தது. மழையால் பாதிக்கப்பட்டு மழைநீரால் முழ்கியிருந்த நெல் பயிா்கள் அனைத்து வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. தவிர மின்கம்பங்களும் விழுந்தன. இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்டவா்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களை, கோட்டூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மு. மணிமேகலை சந்தித்து விவரம் கேட்டறிந்து தனது செலவில் உணவுப்பொருள்கள், உதவித்தொகை வழங்கினாா்.

கோட்டூா் ஒன்றிய ஆணையா் ஜி. சாந்தி, அதிமுக ஒன்றியச் செயலா் பி. ராஜாசேட், திமுக ஒன்றியச் செயலா் பால. ஞானவேல்,சிபிஐ ஒன்றியச் செயலா் கே. மாரிமுத்து ஆகியோா், சூறைக்காற்று வீசிய பகுதிகளை பாா்வையிட்டு மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா். சூற்றைக்காற்றின் தாக்கம் ராமநாதபுரம் அருகேயுள்ள பாலக்குறிச்சியிலும் இருந்ததாகவும், சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அப்பகுதியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com