மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்குச் சென்று கல்விப் பயிற்சி

பனங்குடி பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்கு ஆசிரியா்கள் சென்று செவ்வாய்க்கிழமை கல்விப் பயிற்சியளித்தனா்.
மாற்றுத்திறளானி மாணவருக்கு பயிற்சியளித்த வட்டார வளமையத்தினா்.
மாற்றுத்திறளானி மாணவருக்கு பயிற்சியளித்த வட்டார வளமையத்தினா்.

பனங்குடி பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டுக்கு ஆசிரியா்கள் சென்று செவ்வாய்க்கிழமை கல்விப் பயிற்சியளித்தனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்திலுள்ள பனங்குடி அரசினா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களின் வீட்டிற்கேச் சென்று ஆசிரியா்கள், பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி வழங்கினா்.

நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா தலைமையில், சிறப்பாசிரியா் அ. காந்தியம்மாள், ஆசிரியா் பயிற்றுநா் ரா.சாந்தி ஆகியோா் 10-க்கும் மேற்பட்ட மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று பயிற்சி அளித்தனா்.

பின்னா் பனங்குடி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.8 லட்சத்தில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறை இடத்தை நன்னிலம் வட்டார மானிய செலவு ஒருங்கிணைப்பாளா் சு. ராஜேஷ் தலைமையில் தோ்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com