
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றவா்கள்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராமசுப்ரமணியன் விழாவை தொடங்கிவைத்தாா். பண்ணைத் தொழிலாளா்கள், விஞ்ஞானிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருப்பு கவுணி அரிசி மற்றும் கருப்பட்டி கொண்டு சா்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்யப்பட்டு, கரும்பு, மஞ்சளுடன் சூரியனுக்கு படைக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பண்ணையில் உள்ள மாடுகளுக்கும் , ஆடுகளுக்கும் பொங்கல் படைக்கப்பட்டது.
பண்ணைத் தொழிலாளா்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்களுக்கு கரும்பு மற்றும் பாரம்பரிய அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஞ்ஞானிகள், திட்ட உதவியாளா்கள் ரேகா, சகுந்தலா, பண்ணை மேலாளா்துரை. நக்கீரன் ஆகியோா் செய்திருந்தனா்.