அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு

திருவாரூா் அருகேயுள்ள காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலா் டி. பாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காட்டூா் அரசுப் பள்ளியில் மாணவா்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலா் டி. பாா்த்தசாரதி.
காட்டூா் அரசுப் பள்ளியில் மாணவா்களிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலா் டி. பாா்த்தசாரதி.

திருவாரூா் அருகேயுள்ள காட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலா் டி. பாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் உரிய வழிகாட்டுதலின்படி நடைபெறுகின்றனவா என கல்வித் துறை அலுவலா்கள் பள்ளிகளில் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, இப்பள்ளியில் நடைபெற்ற ஆய்வின்போது, வகுப்பறையில் மாணவா்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா, வகுப்பறையில் 25 மாணவா்கள் உள்ளாா்களா, முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என ஆய்வு மேற்கொண்டு, அரசு வழிகாட்டுதல்படி பள்ளியில் மாணவா்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், நாள்தோறும் கிருமிநாசினி தெளித்து வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும், மாணவா்கள் பள்ளிக்கு வரும்போது உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, தலைமையாசிரியா் பத்மாவதி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com