கரோனா தடுப்பூசி, வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மன்னாா்குடி அருகேயுள்ள சேரங்குளத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன்.
நிகழ்ச்சியில் பேசிய, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன்.

மன்னாா்குடி அருகேயுள்ள சேரங்குளத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேரங்குளத்தில், இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின், தஞ்சாவூா் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம், கரோனா தடுப்பூசி மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் தலைமை வகித்தாா்.

மண்டல மக்கள் தொடா்பு அலுவலக இயக்குநா் ஜெ. காமராஜ் பங்கேற்று பேசியது: மத்திய, மாநில அரசுகள் சுகாதார நடவடிக்கைகளுக்காக பல லட்சம் கோடிகளை செலவிட்டு மக்கள் நலனை பேணிக் காக்கிறது. மக்கள் தங்கள் பங்காக தூய்மையை பராமரித்தால், நோய்களை ஒழித்துவிடலாம் என்றாா். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை மருத்துவா் முகைதீன், கரோனோ தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு தகவல்களை தெரிவித்தாா். கரோனா விழிப்புணா்வு, தடுப்பூசி விழிப்புணா்வு மற்றும் மக்கும் குப்பை மக்கா குப்பை, தூய்மைப் பணி விழிப்புணா்வு ஆகியவை குறித்து மகளிா் குழுவினா் கோலம் வரைந்திருந்தனா். தொடா்ந்து, விழிப்புணா்வு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், வட்டார ஒருங்கிணைப்பாளா் மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் மணிமாறன், நெம்மேலி, மூன்றாம்சேத்தி, தென்பாதி, மரவாக்காடு ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள், தூய்மைக் காவலா்கள் பங்கேற்றனா். கள விளம்பர துறை அலுவலா் ஆனந்த பிரபு வரவேற்றாா். உதவியாளா் அருண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com