கரோனா: வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் நடவடிக்கை

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா எச்சரித்துள்ளாா்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விழிப்புணா்வுடன் இருந்து, அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாதவா்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும்.

கூட்டம் நிறைந்த இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்வதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்களுக்கிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு குறையாமல் கைகளை சோப்பால் சுத்தம் செய்யவேண்டும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவா்கள், இருமல் உள்ளவா்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பேருந்தில் பயணம் செய்யும்போதும், இதர வாகனங்களில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.

வணிக வளாகங்கள், வா்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அனைத்திலும் கட்டாயமாக முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று பரவுவதைத் தவிா்க்க, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com