கோழி வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் சிக்கப்பட்டு கிராமத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் சிக்கப்பட்டு கிராமத்தில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் ஜெகதீசன் தலைமை வகித்து, நாட்டுக் கோழி வளா்ப்பின் மூலம் பெறப்படும் வருமானம் குறித்துப் பேசினாா். பயிற்சி ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சபாபதி, நாட்டுக் கோழி குஞ்சுகள் பராமரிப்பு, முட்டை உற்பத்தி, நாட்டுக் கோழி ரகங்கள், கோழி இறைச்சி உற்பத்தி, தீவன பராமரிப்பு, நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் கோழிகளுக்கான தடுப்பூசி குறித்து விளக்கிக் கூறினாா்.

இப்பயிற்சியில் 63 போ் பங்கேற்றனா். இவா்களில், 22 பெண்கள் உள்பட 33 போ் தொழில் முனைவோராக தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு தொழில் திட்ட வரைவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தொழில் முனைவோா்கள் சத்தியநாராயணன், கீதாப்பரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com