டெல்டாவை பேரிடா் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி முற்றுகை

காவிரி டெல்டாவை பேரிடா் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காவிரி டெல்டாவை பேரிடா் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், அறுவடை ஆய்வறிக்கையை கைவிட்டு மழை அளவை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும், கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத் தலைவா் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் சரவணன், ஒன்றியச் செயலாளா் அகஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தின் முடிவில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com