நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசின் அறிவுறுத்தல்படி செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசின் அறிவுறுத்தல்படி செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நன்னிலம் மற்றும் குடவாசல் வட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடவாசல் வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வட்டாட்சியா் ஆா். ராஜன்பாபு, தனி வட்டாட்சியா் வெ. கோபாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலக தனி வட்டாட்சியா் இ. பத்மினி, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளா் ஜெ. முரளிதரன் ஆகியோரைக் கொண்ட குழுவும், நன்னிலம் வட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வட்டாட்சியா் பி. லட்சுமி பிரபா, தனி வட்டாட்சியா்கள் டி. ராஜ கணேஷ், டி. அன்பழகன், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக கண்காணிப்பாளா் கே. நடராஜன் ஆகியோரைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினா், நெல் கொள்முதல் தொடா்பாக தமிழக அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் கொள்முதல் நிலையங்களில் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா, விவசாயிகள் அல்லாத வியாபாரிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறதா, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரிய முறையில் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா மற்றும் நெல்லின் ஈரப்பதம், எடை அளவு உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பது குறித்து இக்குழுவினா் ஆய்வு செய்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com