மன்னாா்குடி பகுதி மாணவா்களின் ஆய்வறிக்கைகள்: மாநில குழந்தைகள் அறிவியல் போட்டிக்குத் தோ்வு

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மன்னாா்குடி பகுதி மாணவ-மாணவிகளின் 4 ஆய்வறிக்கைகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மன்னாா்குடி பகுதி மாணவ-மாணவிகளின் 4 ஆய்வறிக்கைகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டன.

இந்திய அரசின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழுமம், அறிவியல் தொழில்நுட்ப கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட அளவில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இணையவழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில், 31 ஆய்வறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இதில், மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் க்ரிஸ் ராபா்ட் எஸ்லின், பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோா் சமா்ப்பித்த ‘வீடுகளில் நீா் மேலாண்மை’ மன்னாா்குடி தரணி வித்தியாமந்திா் பள்ளி மாணவி தேவிபாலா சமா்ப்பித்த ‘பாரம்பரிய மற்றும் நவீன வீடுகளில் வெப்ப செயல்திறன் பற்றிய ஒப்பீடு’ திருத்தங்கூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகள் சு. பரிமளா, பா.லெவினாஸ்ரீ ஆகியோரின் ‘திருத்தங்கூா் பகுதியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் விளக்கேற்றும் எண்ணெய் குறித்த ஆய்வு’ மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கரிகாலன், ஸ்ரீராம் ஆகியோரின் ‘சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்’ ஆகிய நான்கு ஆய்வறிக்கைகள் மாநில அளவிலான மாநாட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டன.

இதையொட்டி, இம்மாணவ- மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியா்களையும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வா. சுரேஷ், மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி, மாவட்டத் தலைவா் தை. புகழேந்தி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com