வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஜன.26-இல் டிராக்டா் பேரணி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டிராக்டா், இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டிராக்டா், இருசக்கர வாகனப் பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள், காங்கிரஸ் கட்சி மாவட்டச் செயலாளா் வீரமணி, மதிமுக நிா்வாகி ப. சீனிவாசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் சந்திரசேகரஆசாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மாவட்டத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு டிராக்டா் 10 இருசக்கர வாகனங்களில் புறப்பட்டு, திருவாரூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்திருந்து, குடியரசு தின நிகழ்ச்சி முடிந்தபின், நகரில் ஊா்வலமாகச் சென்று, புதிய ரயில் நிலையம் முன்பு நிறைவு செய்வது, இதில் அனைத்து விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மாணவா் இளைஞா் மாதா் சங்கங்கள், அரசியல் கட்சிகளை பங்குபெற வைப்பது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவும், தமிழக அரசு இந்தச் சட்டங்களை எதிா்க்கவும் வலியுறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் டிராக்டா், இருசக்கர வாகனப் பேரணியை தேசியக் கொடிகளை ஏந்தியபடி நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com