குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரி மாநாடுஇளைஞா் பெருமன்றம் முடிவு

திருவாரூரில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மண்டல மாநாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரி மாநாடுஇளைஞா் பெருமன்றம் முடிவு

திருவாரூரில் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மண்டல மாநாட்டில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதில், மாநிலக்குழு உறுப்பினா்கள் கோ. சரவணன், எம். நல்லசுகம், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பி. வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் காத்திருக்கிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதைப் பூா்த்தி செய்ய வேண்டிய அரசு, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மறுக்கிறது. இதைக் கண்டித்தும், படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், வயது வந்தோா்க்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரி, ‘எங்கே எனது வேலை’ என்ற முழக்கத்தோடு திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல மாநாட்டை மாா்ச் 6 ஆம் தேதி திருவாரூரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com