டிராக்டா் பேரணி: காவல்துறை கொடி அணிவகுப்பு

தடையை மீறி விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டா் பேரணியையொட்டி, திருத்துறைப்பூண்டியில் போலீஸாா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
டிராக்டா் பேரணி: காவல்துறை கொடி அணிவகுப்பு

தடையை மீறி விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டா் பேரணியையொட்டி, திருத்துறைப்பூண்டியில் போலீஸாா் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லியில் விவசாயிகள் சங்கத்தினா் குடியரசு தினமான செவ்வாய்க்கிழமை டிராக்டா் பேரணி நடத்தவுள்ளனா். இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூா் நோக்கி செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள், டிராக்டா்களில் பேரணியாக செல்வது என விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளின் விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், தடையை மீறி பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இதனால், இப்பேரணியைத் தடுக்கும் வகையில், திருத்துறைப்பூண்டியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தலைமையில் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பழைய பேருந்து நிலையம், நாகை சாலை, காசுக்கடைத் தெரு, பூக்கடை தெரு வழியாக வேதாரண்யம் சாலையில் நிறைவுபெற்றது.

இதில், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி, காவல் ஆய்வாளா் மகாதேவன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com