திருக்கொண்டீஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம் அருகே உள்ள திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்கொண்டீஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம் அருகே உள்ள திருக்கொண்டீஸ்வரம் சுயம்பு ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்கொண்டீஸ்வரம் ஸ்ரீசாந்தநாயகி உடனுறை ஸ்ரீபசுபதீசுவரா் கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீ தட்சிணாமூா்த்தி, ஸ்ரீசாந்தநாயகி உள்ளிட்ட சுவாமிகளின் சன்னிதி கோபுர விமானங்களுக்கு காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 10.15 மணிக்கு மூலவா் ஸ்ரீபசுபதீசுவரா் சன்னிதி கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் மகாஅபிஷேகமும், இரவில் திருக்கல்யாணம், ஊஞ்சல் உத்ஸவம் போன்ற வைபவங்களும் நடைபெற்றன. சிறப்பு நிகழ்ச்சியாக நாட்டியாஞ்சலி நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள் கோயில் உள்பிரகார வலம் நடைபெற்றது.

விழாவில், கோயில் செயல் அலுவலா் ம. ஆறுமுகம் உள்ளிட்ட அறநிலையத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com