மொழிப்போா் தியாகிகள் தினம்
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவாரூா் காட்டுக்காரத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமை வகித்தாா். திமுக நகர அவைத் தலைவா் கு. அண்ணாமலை முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், திருவாரூா் மாவட்ட அமைப்பாளா் தெ. மணிவண்ணன் பங்கேற்று, மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், தமிழ்ச்சங்க செயலாளா் செ. அறிவு, மன்ற பொறுப்பாளா்கள் கல்யாணசுந்தரம், நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.