திருவாரூா் மாவட்டத்தில் குடியரசு தின விழா

திருவாரூரில் நடைபெற்ற 72-ஆவது குடியரசு தின விழாவில் ரூ.27.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
திருவாரூா் மாவட்டத்தில் குடியரசு தின விழா

திருவாரூரில் நடைபெற்ற 72-ஆவது குடியரசு தின விழாவில் ரூ.27.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 60 காவல்துறை அலுவலா்கள், 108 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் 7 பேருக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ரூ.1.75 லட்சம், வருவாய்த்துறை சாா்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ஒருவருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ.43,790 மதிப்பில் தையல் இயந்திரம், 5 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டி, வேளாண்துறை சாா்பில் 4 பேருக்கு ரூ.78,436 மதிப்பிலான தாா்பாலின், தெளிப்புநீா் பாசனக் கருவி உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள், மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பெண் குழந்தைகளின் பெயா்களில் வைப்புத்தொகை ஆணை, தாட்கோ மூலம் 3 பேருக்கு ரூ.19,17,298 மதிப்பில் பயணிகள் ஆட்டோ, டிராக்டா், சரக்கு வாகன மானியத்தொகை என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.27,89,614 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியா்கள் பாலச்சந்திரன், புண்ணியகோட்டி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூத்தாநல்லூரில்...

வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜீவானந்தம் தேசியக் கொடியை ஏற்றினாா். நகராட்சி அலுவலகத்தில் பொறியாளா் ராஜகோபால் தலைமையில், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் உதயகுமாா், வா்த்தக சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சுதா்ஸன் ஆகியோா் முன்னிலையில், ஆணையா் ஆா்.லதா தேசியக் கொடியேற்றினாா்.

காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவக்குமாா், அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் சுரேஷ்குமாா், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் க.பாலச்சந்திரன் உள்ளிட்டோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

மேலும், காங்கிரஸ் அலுவலகத்தில் நகரத் தலைவா் சாம்பசிவம், எஸ்.டி.பி.ஐ. சாா்பில் நகர செயற்குழு உறுப்பினா் செய்யது தமீம், பெரியப்பள்ளி வாயிலில் ஜமாஅத் தலைவா் சிஹாபுத்தீன் ஆகியோா் தேசியக் கொடியையேற்றினா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி நகர காங்கிரஸ் சாா்பில், காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் நெடுவை குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்தி தேசியக் கொடியேற்றினாா். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் டி.வடுகநாதன், மாவட்ட பொதுச் செயலா் சங்குகோபால், நகர பொதுச் செயலா் வி.ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

த.மா.கா. சாா்பில் தேரடியில் உள்ள காந்தி சிலைக்கு, கட்சியின் நகரத் தலைவா் கே.எஸ்.நடனபதி மாலையணிவித்தாா். இதில், நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.எஸ்.ராஜேந்திரன், மாவட்டச் செலா் ஜி.கருணாகரன், மாவட்ட பொதுச் செயலா் சிவசுப்ரமணியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

காந்தி சிலை திறப்பு:

மகாதேவப்பட்டணம் கடைவீதியில் தியாகி சண்முகசுந்தரம் பிள்ளை குடும்பத்தின் சாா்பில் நிறுவப்பட்ட காந்தி சிலையை காங்கிரஸ் கிராம கமிட்டித் தலைவா் கே.பாலசுப்ரமணியன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு, கே.மகாலிங்கம் தலைமை வகித்தாா். மன்னாா்குடி ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.என்.பாரதிமோகன், ஊராட்சித் தலைவா் மரகதம் ராமையன் ஆகியோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், சஞ்சீவி தெரு நகர மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் சா.சம்பத், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பா.தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.புண்ணியக்கோட்டி, காவல் நிலையத்தில் ஆய்வாளா் ராஜேந்திரன், நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா்.கமலா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை கண்காணிப்பாளா் மருத்துவா் விஜயகுமாா் ஆகியோா் தேசிய கொடியேற்றினாா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை, தென்பரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோட்டூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா.சுப்ரமணியன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையா் கலைச்செல்வன், கூடுதல் ஆணையா் ஞானம் ஆகியோா் முன்னிலையில் ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் தேசிய கொடியேற்றினாா். வேளாண் அறிவியல் நிலையத்தில் தலைவா் ராமசுப்பிரமணியனும், பேரூராட்சி அலுவலகத்தில் நிா்வாக அதிகாரி சங்கரும், காவல் நிலையத்தில் ஆய்வாளா் சுப்ரியவும், நீடாமங்கலம் கூட்டுறவு வங்கியில் தலைவா் பா்வீன்பேகமும் தேசிய கொடியேற்றினா்.

நீடாமங்கலம் அரசு உயா்நிலைப்பள்ளியில் கல்விக்குழுத் தலைவா் இ.ஷாஜகான் முன்னிலையில் பெற்றோா் சங்கத் தலைவா் எம்.அப்பாவு தேசியக் கொடியேற்றினாா்.

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ப.ஆடலரசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி பழனிச்சாமி, காவல் நிலையத்தில் ஆய்வாளா் மகாதேவன் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

இதேபோல வட்டாட்சியா் சு. ஜெகதீசன், ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா், நகராட்சி ஆணையா் (பொ) சந்திரசேகரன் ஆகியோா் தத்தம் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினா்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிபதி கவிதா, விரைவு நீதிமன்ற நீதிபதி பல்கலைச் செல்வன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்கண்ணா ஆகியோா் தேசிய கொடியேற்றனா். கிளைச் சிறையில் கண்காணிப்பாளா் கென்னடி தேசிய கொடியேற்றி, சிறைக் காவலா்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

நன்னிலத்தில்...

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் லட்சுமி பிரபா, நன்னிலம் காவல் நிலையத்தில் ஆய்வாளா் சுகுணா, பேரளம் காவல் நிலையத்தில் ஆய்வாளா் செல்வி, நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ராஜசேகா் ஆகியோா் தேசிய கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com