கூடுதல் மகசூல் தரும் நெல்ரக சாகுபடி பயிற்சி
By DIN | Published On : 28th January 2021 07:31 AM | Last Updated : 28th January 2021 07:31 AM | அ+அ அ- |

நன்னிலம் வட்டம் போழக்குடி கிராமத்தில், கூடுதல் மகசூல் தரக்கூடிய, மழையில் சாயாத புதிய நெல் ரக சாகுபடிப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகியன சாா்பில், நிலையத்தின் இயக்குநா் வெ. அம்பேத்கா் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிலைய பேராசிரியா்கள், நெல் மற்றும் தரிசுப்பயறு வகைப் பயிா்கள் பயிரிடுவது பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு அளித்தனா். பயிா் மரபியல் உதவி பேராசிரியா் ௌஇரா. அருள்மொழி, இரா.புஷ்பா, த.சசிகுமாா், அர. மணிமாறன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.