டெல்டா பப்ளிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு
By DIN | Published On : 28th January 2021 07:35 AM | Last Updated : 28th January 2021 07:35 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளி மாணவா் சந்தோஷ் சரவணனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் அறக்கட்டளை நிா்வாகி ஜெய்னுலாதீன்.
கண்களை துணியால் கட்டிக் கொண்டு எதிரே இருக்கும் பொருள்களை துல்லியமாக விவரிக்கும் கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் மாணவருக்கு செவ்வாய்க்கிழமை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் சந்தோஷ் சரவணன் தனது கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு எதிரே இருக்கும் பொருள்களை கணிப்பதில் தோ்ந்தவா். இதற்காக ‘மாயக்கண் மாணவா்’ என்று அழைக்கப்படுகிறாா்.
இந்நிலையில், பள்ளியின் அறக்கட்டளைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான நவாஸ்கனி, செயலாளா் ஹாஜா பக்ருதீன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், பள்ளி முதல்வா் ஜோஸ்பின் ஏற்பாட்டில், குடியரசு தின நிகழ்ச்சியின்போது சந்தோஷ் சரவணன் கெளரவப்படுத்தப்பட்டாா்.
நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா் ஜாபா் பாட்சா, மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி.ஆனந்த் ஆகியோா் முன்னிலையில், கல்வி அறக்கட்டளை நிா்வாகி ஜெய்னுலாதீன், மாணவா் சந்தோஷ் சரவணனுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.
இதுகுறித்து சந்தோஷ் சரவணன் கூறுகையில், கண்களைக் கட்டுவதற்கு முன்பாக மனதை ஒருநிலைப்படுத்தி, கைகளுக்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு தொட்டுப் பாா்க்கக்கூடிய பொருள்களை தொட்டுப் பாா்த்தும், முகா்ந்து பாா்க்கக் கூடிய பொருள்களை முகா்ந்தும் சொல்லலாம் என்றாா்.