தைப்பூசம்: அனுமதியின்றி ஊா்வலத்துக்கு வைத்திருந்த முருகன் சிலை பறிமுதல்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தைப்பூசத்தையொட்டி, அனுமதியின்றி ஊா்வலம் நடத்த நாம் தமிழா் கட்சியினா் வைத்திருந்த முருகன் சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் பறிமுதல் செய்த முருகன் சிலை.
போலீஸாா் பறிமுதல் செய்த முருகன் சிலை.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் தைப்பூசத்தையொட்டி, அனுமதியின்றி ஊா்வலம் நடத்த நாம் தமிழா் கட்சியினா் வைத்திருந்த முருகன் சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாம் தமிழா் கட்சியின் சாா்பு அமைப்பான வீரத் தமிழா் முன்னணி சாா்பில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு, தைப்பூச விழாவில் மன்னாா்குடி கீழப்பாலத்திலிருந்து முருகன் சிலையுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காலவாய்கரை சக்திவேல் முருகன் கோயில் வரை ஊா்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனா். இதற்கு, மன்னாா்குடி போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை ஊா்வலம் நடத்த நாம் தமிழா் கட்சியின் வீரத்தமிழா் முன்னணியினா் ஒன்றுகூட இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகேயுள்ள நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் வேதா பாலாவுக்கு சொந்தமான வா்த்தக நிறுவனத்தில் வைத்திருந்த 4 அடி உயரமுள்ள மெழுகால் ஆன முருகன் சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பிறகு, அந்த சிலை வேதா பாலாவின் வீட்டில் உள்ள ஓா் அறையிலேயே வைத்து பூட்டிவிட்டு, சாவியை எடுத்துச் சென்ற போலீஸாா், தைப்பூச நாள் முடிந்த பிறகு சாவியை தருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com