திருட்டு புகாரில் ஒருவா் கைது
By DIN | Published On : 31st January 2021 02:14 AM | Last Updated : 31st January 2021 02:14 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியதாக சனிக்கிழமை ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி போலீஸாா் சனிக்கிழமை மதுக்கூா் புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இதில், அவா் பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூரை சோ்ந்த சக்திவேல் (42) என்பதும், கடந்த திங்கள்கிழமை இரவு மன்னாா்குடி ருக்மணிபாளையத்தில் உள்ள கே.பசும்பொன் என்பவரது பேருந்து அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.1000-ஐயும், மன்னாா்குடி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனியாா் வங்கி ஊழியா் எஸ்.நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு அரை பவுன் மோதிரம், ரூ. 5 ஆயிரம் மற்றும் பட்டு சேலைகளை திருடியதும் தெரியவந்தது. சக்திவேலை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.