இணையவழியில் பயிா்நூற்புழுக்கள் மேலாண்மை பயிற்சி
By DIN | Published On : 06th July 2021 12:02 AM | Last Updated : 06th July 2021 12:02 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிா் நூற்புழுக்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை குறித்த இணையவழி பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினாா். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிா்ப் பாதுகாப்பு இயக்குநா் பிரபாகா் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசுகையில் ‘நூற்புழுக்கள், நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பை விவசாயிகள் சரியான முறையில் கண்டறிய வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நூற்புழுக்களை அழிக்க உயிரியல் முறையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது’ என்றாா்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நூற்புழுவியல் துறைத் தலைவா் சாந்தி ‘நூற்புழுக்கள் தாக்கும் பயிா்கள், சேதத்தின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்’ பற்றி விளக்கிக் கூறினாா்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ஜெகதீசன், கமலசுந்தரி மற்றும் செல்வமுருகன் ஆகியோா் பயிற்சியில் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் சகுந்தலா, ரேகா, நக்கீரன், சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.