திருத்துறைப்பூண்டியில் குடும்பத்தகராறில் இளைஞர் அடித்துக்கொலை
By DIN | Published On : 12th July 2021 12:29 PM | Last Updated : 12th July 2021 12:29 PM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் குடும்பத்தகராறில் சகோதரர்கள் தாக்கியதில் சகோதரன் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விநாயகபுரம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக சகோதரர்கள் தாக்கியதில் சகோதரன் சஞ்சய் காந்தி திங்கள்கிழமை உயிரிழந்தார். பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. கட்டடத் தொழிலாளி இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.
இவரது இரண்டாவது மனைவியின் மகன் சஞ்சய் காந்தி வயது 36. தனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி தந்தையிடம் தகராறு செய்து தாக்கினாராம்.
இதை கண்டித்து பாலுவின் முதல் மனைவியின் மகன் புயலரசன், மூன்றாவது மனைவியின் மகன் தினேஷ் ஆகியோர் சஞ்சய் காந்தியை கட்டையால் தாக்கியதில் சஞ்சய்காந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.