கொரடாச்சேரி, குடவாசலில் காமராஜர் பிறந்த நாள் விழா

கூத்தாநல்லூர் அடுத்த கொரடாச்சேரி மற்றும் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு,600 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  
கூத்தாநல்லூரில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.
கூத்தாநல்லூரில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

கூத்தாநல்லூர் அடுத்த கொரடாச்சேரி மற்றும் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, 600 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குடவாசல் வட்டாரத் தலைவர் கே.எஸ்.முனியய்யா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அன்பு வே.வீரமணி முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் செந்தில்வேலன் வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளர் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காமராசர் உருவப் படத்திற்கு மாலையணிவித்தார். தொடர்ந்து, அவர் பேசியது, தமிழகத்தை முன்னோக்கி கொண்டு சென்ற காமராசரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.
16 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து, பொதுச் சேவை செய்யத் தொடங்கினார். தனக்கென வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர். திருமணமே ெசய்து கொள்ளாமல், ஆயுள் முழுவதையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் காமராசர். 
9 ஆண்டுகள் தன்னுடைய இளம் வயது வாழ்க்கையை சிறையிலேயே கழித்தவர். அவரது ஆட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள், இலவச மதிய உணவுத் திட்டம், ஏராளமான தொழிற்சாலைகள், மின் திட்டம், நீர்ப் பாசனத் திட்டம், சீருடை, இலவச பாடப் புத்தகம், நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் என ஏராளமான தொலை நோக்குத் திட்டங்களை நாட்டு மக்களுக்காகச் செய்தவர்தான் கிங் மேக்கர் காமராசர். 
அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம் என்றார். தொடர்ந்து, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில், கொரடாச்சேரி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட மகளிரணித் தலைவி அம்பிகா ரவி, சட்டப்பேரவை ெதாகுதி இளைஞர் அணித் தலைவர் முக்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, ரங்கசாமி, இளங்கோவன், அசோக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com