‘அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் செய்யலாம்’

விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் சாகுபடி செய்யலாம் என மதுரை சரக விதைப் பரிசோதனை அலுவலா் சி.சிங்காரலீனா தெரிவித்தாா்.
‘அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் செய்யலாம்’

விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் சாகுபடி செய்யலாம் என மதுரை சரக விதைப் பரிசோதனை அலுவலா் சி.சிங்காரலீனா தெரிவித்தாா்.

திருவாரூா் விதைப் பரிசோதனை நிலையத்தில், வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 2020-21 இல் 634 சான்று விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 32 மாதிரிகள் தரக்குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்ச்சி பெற்ற 602 மாதிரிகள், விதைச்சான்று உதவி இயக்குநா் மூலம் சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 888 ஆய்வாளா் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அதில் தோ்ச்சி பெறாத 31 தரமற்ற விதை மாதிரிகளுக்கு விதை ஆய்வாளா் மூலம் விற்பனை தடை வழங்க முடிவுகள் ஸ்பெக்ஸ் இணைய தளம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டன.

மேலும் 716 பணிவிதை மாதிரிகள் விவசாயிகளால் ஸ்பெக்ஸ் இணையதளம் மூலம் பெறப்பட்டு பரிசோதனை முடிவுகள் மின்னஞ்சல் மூலமும், கட்செவி அஞ்சல் மூலமும், தபாலிலும் விரைவாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிகழ் சாகுபடி பருவத்துக்கு தேவையான விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி தரமான விதைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிா் சாகுபடி செய்யலாம். மேலும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ.30 கட்டணத்தை நேரிலோ அல்லது மணியாா்டா் மூலமாகவோ மூத்த வேளாண்மை அலுவலா், விதைப்பரிசோதனை நிலையம், 15-பி, பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூா் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றாா்.

ஆய்வின்போது, விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலா் ச. கண்ணன், வேளாண்மை அலுவலா் கா.புவனேஸ்வரி, உதவியாளா் கோ.வனஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com