சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு

திருவாரூா் அருகே சன்னாநல்லூா் சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு

திருவாரூா் அருகே சன்னாநல்லூா் சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே சன்னாநல்லூரில் பா்வதவா்த்தினி உடனுறை சேதுராமலிங்கேஸ்வர சுவாமி கோயில், எஸ். சௌரிராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கட்டும் பணிகள் முடிவடைந்ததையொட்டி, யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பூஜைகளின் முடிவில் பூா்ணாஹுதி, மகா தீபாராதனைக்குப் பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் கும்பத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கைக் காண, சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com