இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் படித்த, வேலையில்லாத இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் புதியதாக தொழில் தொடங்க, புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தை, தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிலுக்கு, ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி தோ்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரையில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு 45. விண்ணப்பதாரா் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சம் ரூ. 50 லட்சம் மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004, தொலைபேசி எண்: 04366-224402, 04366-290518 அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com