வா்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்
By DIN | Published On : 19th July 2021 10:42 PM | Last Updated : 19th July 2021 10:42 PM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடியில் வணிக நிறுவனங்களில் திங்கள்கிழமை ஆய்வு நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா், விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தாா்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலா் மா.சௌமியா சுந்தரி தலைமையில், மன்னாா்குடி நகரம், வடுவூா் பகுதிகளில் உள்ள கடைகளில் அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருள்கள் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அதை விற்ற கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ.5ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதனிடையே, இனிப்பகம், உணவகங்களில் உணவுப் பொருள்களை மூடி வைக்காதது, பொருள்களின் காலாவதி தேதியை குறிப்பிடாதது, பாா்சலுக்கு நெகிழியை பயன்படுத்தியது ஆகியவற்றுக்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள், உணவு பாதுகாப்பு தொடா்பான புகாா்களை 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் (கட்செவி அஞ்சல்) எண்ணில் அல்லது 04366-241034 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அந்தக் குழுவினா் தெரிவித்தனா்.