கல்வி வளா்ச்சி தின பேச்சுப் போட்டி

மன்னாா்குடி பாரதிதாசன் ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அகாதெமி சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி, இணையவழி வாயிலாக பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

மன்னாா்குடி பாரதிதாசன் ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அகாதெமி சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி, இணையவழி வாயிலாக பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாரதிதாசன் அகாதெமிநிறுவனா் கே. அன்பழகன் தலைமை வகித்தாா். அரசு மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வா் ஆா்.மாரியப்பன், தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் எஸ். அன்பரசு ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். நாட்டின் வளா்ச்சியிலும், கல்வி வளா்ச்சியிலும் காமராஜரின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், 6, 7, 8-ஆம் வகுப்பு பிரிவுகளில் மன்னாா்குடி பாரதி வித்யாலயா பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ஜி.எம். நிகிதா, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் ஆா்.ஆனுஷ் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இதேபோல், 9 முதல் 12-ஆம் வகுப்பு பிரிவில், திருமக்கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி ஜி. தீபிகா,திருப்பூா் வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவா் ஜி. மோகன்குமாா் சிறப்பிடம் பெற்றனா். கல்லூரி மாணவா்களுக்கான பிரிவில் மன்னாா்குடி அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் எஸ். குருசீலன், வி. மகேஸ்வரி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்றவா்களுக்கு சான்றிதழ்களும், பரிசு புத்தகங்களும் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியா்கள் எஸ்.கணேஷ் குமாா் வரவேற்க, கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com